தேசிய செய்திகள்

முல்லைப் பெரியாறு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. விளக்க மனுவில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மழைக்காலங்களில் தொடர்ச்சியாகவும் மற்ற நேரங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும் மேற்பார்வை குழு ஆய்வு செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய குழு எதுவும் தேவை இல்லை.அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச குழுவை கொண்டு முல்லைப் பெரியாறு அணையை சோதனை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் என்பவர் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்