தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சுப்ரீம் கோர்ட்டில் இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த மனுவில், கொரோனாவை முன்னிட்டு பொது முடக்கம், கட்டுப்பாடுகள் காரணமாக 2020-21, 2021-22 கல்வியாண்டுகளுக்கான கால அட்டவணையை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை. எனவே, அகில இந்திய ஒதுக்கீடுக்கான இடங்கள், நிகர்நிலை, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் ஆகியவற்றுக்கான நடப்பாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நவம்பர் 25-ந்தேதி வரை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, நடப்பாண்டு முதுநிலை மருத்துவர் மாணவர் சேர்க்கையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்