டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலரஞ்சலி
டெல்லியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள சக்திஸ்தல்லில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.