தேசிய செய்திகள்

மைசூரு-சென்னை இடையே புதிய வந்தேபாரத் ரெயில் சேவை: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

மைசூரு-சென்னை இடையே மேலும் ஒரு வந்தேபாரத் ரெயில் சேவை தொடங்கப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு,

சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரெயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த பாதையில் மேலும் ஒரு வந்தேபாரத் ரெயில் சேவை தொடங்கப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது ஓடும் வந்தேபாரத் ரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு மைசூருவுக்கு வருகிறது. இந்த நிலையில் புதிய வந்தேபாரத் ரெயில் மைசூருவில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் செயல்பட தொடங்க உள்ளது.

இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். இது மைசூருவில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு சென்னையை சென்றடையும். இடையில் மண்டியா, பையப்பனஹள்ளி விஸ்வேசுவரய்யா ரெயில் நிலையம் (பெங்களூரு), கே.ஆர்.புரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய இடங்களில் நின்று செல்லும். மைசூரு ரெயில் நிலையத்தில் இந்த ரெயிலுக்கு பராமரிப்பு வசதிகள் செய்யப்படும் வரை இந்த ரெயில் பெங்களூரு-சென்னை இடையே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக அந்த ரெயில் சென்னை எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு மைசூரு வந்தடையும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்