தேசிய செய்திகள்

4 அடுக்குகள் கொண்ட வரிமுறைக்கு பதிலாக.. இனி 2 அடுக்குகளாக மாறுகிறது ஜி.எஸ்.டி.

வரிகுறைப்பு மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. தற்போது 4 அடுக்குகள் கொண்ட வரிமுறையாக இருக்கிறது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது. இந்நிலையில், தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்துள்ளார்.

மாற்றி அமைக்கப்படும் ஜி.எஸ்.டி.யில் 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும் என்று மத்திய அரசு உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது, 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும்.

தற்போது, 12 சதவீத வரிஅடுக்கில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரிஅடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. அதுபோல், 28 சதவீத வரிஅடுக்கில் இருக்கும் 90 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் 18 சதவீத வரிஅடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதுதவிர, ஆடம்பர பொருட்கள் மற்றும் பாவ பொருட்களுக்கு 40 சதவீதம் என்ற சிறப்பு அடுக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால், இதில் வெறும் 7 பொருட்கள் மட்டுமே இருக்கும். புகையிலையும் 40 சதவீத வரிவிதிப்பில் வரும்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகு இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும். வரிகுறைப்பு மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்றும், வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அதை ஈடுகட்டி விடும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை