தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இன்றி 4 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று கூறும்போது, பொருளாதாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து மீள வேண்டிய நிலையில் தொடர்ந்து நாம் இருக்கிறோம்.

அடுத்தடுத்து வளர்ச்சி அடைவதற்கான தேவையும் உள்ளது. நமக்கு பின்னால் கொரோனா 2வது அலையின் பாதிப்பு உள்ளது. பெரிய அளவிலான கொரோனா தடுப்பூசி பணிகள், பொருளாதார செயல்பாடுகளில் இயல்பு நிலை திரும்புவதற்கான சிறந்த நம்பிக்கையை நமக்கு வழங்கியுள்ளது என கூறியுள்ளார்.

இதேபோன்று, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்க கூடிய கடன் விகிதத்தில் (ரெப்போ விகிதம்) மாற்றமின்றி தொடர்ந்து 4 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரெப்போ விகிதம் 8வது முறையாக மாற்றமின்றி, பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான நிலைப்பாடு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்