தேசிய செய்திகள்

கேரள மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு

கேரள சட்டசபையில் கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் அளித்த புகாரின் பெயரில் அமளியில் ஈடுபட்ட 6 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், அந்த வழக்கை திரும்பப்பெறக் கோரி அரசு வக்கீல் தாக்கல் செய்த மனுவை திருவனந்தபுரம் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தார். அந்த உத்தரவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஜித் உள்ளிட்ட 6 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று கூறிய தீர்ப்பில், 2015-ம் ஆண்டில் கேரள சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெறக் கோரிய மனுவை விசாரணை கோர்ட்டும், ஐகோர்ட்டும் நிராகரித்தது சரியே. அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெறக் கோரும் மேல்முறையீட்டு மனு எவ்வித தகுதிப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு