புதுடெல்லி,
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மே 25-ந்தேதி, உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அப்போது, விமானத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உணவு வழங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.
இந்தநிலையில், இந்த உத்தரவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று மாற்றம் செய்தது. அதன்படி, 2 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட பயண நேரம் கொண்ட விமான பயணங்களின்போது மட்டுமே, விமானத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும், 2 மணி நேரத்துக்கு குறைவான விமான பயணங்களில் உணவு வழங்க வேண்டாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தடை 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது