போர்ட் பிளேர்,
அந்தமான் நிகோபார் தீவுகளில் கொரோனா தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபாரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
தீவுக்கூட்டமான அந்தமானில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,670- ஆக உயர்ந்துள்ளது. அந்தமானில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 7 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,534- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129- ஆக உள்ளது. அந்தமானில் மொத்த தொற்று பாதிப்பு விகிதம் 1.25-சதவிகிதமாக உள்ளது. அந்தமானில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரத்து 634- பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.