தேசிய செய்திகள்

அரசியல்வாதிகளின் சொத்து குவிப்பு விஷயத்தில் அரசின் மெத்தனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு அரசியல்வாதிகளின் சொத்துக் குவிப்பு விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

புதுடெல்லி

தங்களுக்கு இது தொடர்பாக கொடுக்கப்பட்ட தகவல்கள் நிறைவானவையல்ல என நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய நேரடி வரி வாரியம் தகவல்களை கொடுத்திருந்தது.

இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிக்கையாக கொடுக்கும்படி உத்தரவிட்டது நீதிமன்றம். இரு தேர்தல்களுக்கு இடையில் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பு 500 சதவீதம் வரை அதிகரித்துவிடுவதாக நீதிமன்றம் கூறியது.

தற்போதைய வழக்கு அரசியல்வாதிகள் தங்களது சொத்து விவரங்கள், குடும்பத்தினரின் சொத்துவிவரங்கள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றனர். ஆனால் வருமான மூலத்தை குறிப்பிடுவதில்லை என்று கூறிய மனுவின் மீது விசாரிக்கப்படுகிறது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்