தேசிய செய்திகள்

சிபிஐ இயக்குநர் அறிக்கை கசிவு : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபம்

சிபிஐ இயக்குநர் அறிக்கை கசிந்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் குமார் வர்மா மற்றும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டனர்.

இந்த நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் சி.பி.ஐ. இயக்குனர் மீதான புகார்கள் பற்றி ரகசியமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி அலோக் வர்மாவை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரித்தது. பின்னர், விசாரணையின் அறிக்கையை அண்மையில் மூடி முத்திரையிட்ட உறையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் நகல் அலோக் வர்மாவுக்கு அளிக்கப்படவேண்டும். அவர் இதற்கு திங்கட்கிழமைக்குள் பதில் தரவேண்டும். இந்த வழக்கை 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் மூடிய முத்திரையிட்ட உறையில் தனது பதிலை அளிக்கும்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சி.பி.ஐ. இயக்குநரிடம், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று கேட்டு கொண்டது.

தொடர்ந்து, விசாரணை தேதியை நாங்கள் மாற்ற போவதில்லை. மிக விரைவில் பதில் அறிக்கையை அளியுங்கள். உங்களது பதிலை நாங்கள் படித்து பார்க்க வேண்டியுள்ளது என தெரிவித்தது.

இதனை அடுத்து சி.பி.ஐ. இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர நாராயணன், பதில் அறிக்கையை சமர்ப்பித்து விடுவோம் என கூறினார்.

இந்நிலையில், மூடி முத்திரையிட்ட உறையில் தனது தரப்பு பதிலை சி.பி.ஐ. இயக்குநர் வர்மா சார்பில் நேற்று மதியம் 1 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை தாக்கல், விசாரணைக்கு வரும் முன்னரே வெளியில் கசிந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே கவுல், கேஎம் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தகவல் கசிவு குறித்து நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது அதிர்ச்சி அளிப்பதாக அலோக் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாரிமன் கூறினார்.

இதனையடுத்து கோபமடைந்த நீதிபதிகள், உங்களின் எந்த வழக்குகளும் விசாரிக்க தகுதியற்றவை. எப்படி வழக்கு குறித்தான தகவல்கள் வெளியே கசிந்தன என கோபத்துடன் விசாரணையை நவம்பர் 29ந்தேதி ஒத்திவைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு