தேசிய செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைப்பு

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன.

இந்த நிலையில் மானியமில்லாத சிலிண்டரின் விலை (ஜூலை -1ம் தேதி) இன்று நள்ளிரவு முதல் ரூ.100.50 காசு குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வரை ரூ.737.50 ஆக விற்கப்பட்டு வந்த மானியமில்லாத சிலிண்டர் நாளை முதல் ரூ.637 ஆக விற்பனை செய்யப்படும்.

மானிய விலை சிலிண்டரின் விலையில் குறிப்பிடத்தகுந்த வகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்று வரை ரூ.497.37 ஆக விற்கப்பட்ட மானிய விலை சிலிண்டர் நாளை முதல் ரூ.494.35 ஆக விற்கப்படும். சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை மாற்றம் காரணமாக இந்த விலை குறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் எரிவாயு நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு