தேசிய செய்திகள்

மே 18-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன்: தேர்தல் பிரசார கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு

மே 18-ந் தேதி நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன் என தேர்தல் பிரசார கூட்டத்தில் எடியூரப்பா பேசியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று கலபுரகியில் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கலபுரகியில் நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் எடியூரப்பா பேசுகையில், தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் மோடி முன்னிலையில் மே மாதம் 17 அல்லது 18-ந் தேதி நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்பேன். பதவி ஏற்பு விழாவில் 3 லட்சம் முதல் 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றார்.

தேர்தலில் காங்கிரசை நிராகரிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். புதிய கர்நாடகத்தை கட்டமைக்க மக்கள் ஆதரவு வழங்குவார்கள். பிரதமர் மோடி பிரசாரம் செய்ய தொடங்கியதும் பா.ஜனதாவுக்கு இன்னும் கூடுதல் பலம் கிடைக்கும். தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யும் என்றும் எடியூரப்பா பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு