தேசிய செய்திகள்

அர்னாப் கோஸ்வாமி மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்வது மட்டுமே பிரார்த்தனையாக இருக்க முடியும் - சுப்ரீம் கோர்ட்

அர்னாப் கோஸ்வாமி மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்வது மட்டுமே பிரார்த்தனையாக இருக்க முடியும் என அவரின் வக்கீல் ஹரிஷ் சால்வேயிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூறி உள்ளார்.

புதுடெல்லி

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். பிரபல ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால், இந்த இரட்டை தற்கொலை நடந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக அன்வய் நாயக்கின் மகள் அளித்த புகாரின்பேரில், கடந்த புதன்கிழமை அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அலிபாக் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். அப்போது அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் நேற்று அலிபாக் செசன்ஸ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர் அதுவும் மறுக்கபட்டது.

இதை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடினார். இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்குவதற்கு முன் அர்னாப் கோஸ்வாமிக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிடம் நீதிபதி சந்திரசூட் இந்த எப்.ஐ.ஆரில் சவால் இருக்கும் ஒரு அம்சத்தை நாங்கள் கவனிக்கிறோம். இந்த ஒரே ஒரு எப்.ஐ.ஆரால் அர்னாப் கோஸ்வாமி சிறையில் அடைக்கப்பட்டார். எப்.ஐ.ஆரை ரத்து செய்வதுதான் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பிரார்த்த்னையாக இருக்க முடியும் என்று கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்