தேசிய செய்திகள்

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள நகை, நாணயங்கள் நீக்கம்

மேற்கு வங்காளத்தில் இளம்பெண்ணின் வயிற்றில் 1.5 கிலோ எடையுள்ள நகை, நாணயங்கள் இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

ராம்பூரத்,

மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தில் ராம்பூரத் நகரில் கிராமமொன்றில் வசித்து வந்த 26 வயது இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன்பின் பெண்ணின் வயிற்றில் இருந்து 90 நாணயங்கள் மற்றும் சில தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டன.

செப்பு மற்றும் பித்தளையால் செய்யப்பட்ட ரூ.5, ரூ.10 ஆகிய மதிப்புகளை கொண்ட நாணயங்களுடன், சங்கிலி, மூக்கு வளையம், காதணி, வளையல் மற்றும் கடிகாரம் உள்ளிட்ட பொருட்களும் வயிற்றில் இருந்துள்ளன. இவற்றின் மொத்த எடை 1.5 கிலோ ஆகும்.

இதுபற்றி இளம்பெண்ணின் தாயார் கூறும்பொழுது, மனநிலை பாதிக்கப்பட்ட அவள் கடந்த சில நாட்களாக சாப்பிட்டு முடித்தவுடன் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி எறிய தொடங்கினாள். நகைகளும் தொடர்ந்து காணாமல் போயின. இதுபற்றி கேட்டால் அழ தொடங்கி விடுவாள்.

அவளை தொடர்ந்து கவனித்ததில், இந்த பொருட்களை விழுங்கியது தெரிய வந்தது. இதன்பின் மருத்துவமனையில் ஒரு வாரம் பல்வேறு பரிசோதனைகள் செய்து முடித்த பின்னர் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை