தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் பாரம்பரிய கல் எறியும் திருவிழாவில் 400க்கும் கூடுதலானோர் காயம்

மத்திய பிரதேசத்தில் காட்மர் என்ற பாரம்பரிய கல் எறியும் திருவிழாவில் பங்கேற்றவர்களில் 462 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்மர் என்ற பாரம்பரிய திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம்.

ஜாம் ஆற்றின் இரு கரைகளிலும் சாவர்காவன் மற்றும் பந்துர்னா நகர மக்கள் குவிந்து இருப்பர். ஆற்றின் நடுவில் காய்ந்த மரத்தின் உச்சியில் கொடி ஒன்று ஏற்றப்பட்டிருக்கும்.

இரு புறமும் உள்ள மக்கள் கற்களை மறுபுறம் நோக்கி வீசி கொண்டே ஆற்றின் நடுவே சென்று கொடியை கைப்பற்ற வேண்டும்.

இந்த முறை பந்துர்னா கிராம மக்கள் கொடியை கைப்பற்றினர். இந்த சம்பவத்தில் 462 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் ஆத்திரத்தில் ஆம்புலன்சு மற்றும் போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மக்களை கலைந்து போக செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்