தேசிய செய்திகள்

இந்தியா ஒரு அமைதியான சூழ்நிலையில் இருப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை - எல்லை பாதுகாப்பு படை

இந்தியா ஒரு அமைதியான சூழ்நிலையில் இருப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை என எல்லை பாதுகாப்பு படை ஐஜி சோனாலி மிஸ்ரா கூறினார். #CeaseFireViolation #Tamilnews

ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய தாக்குதலில் வீடுகள் சேதமடைந்துள்ளது. இன்று காலையில் உரி பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது உரி பகுதியில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளது.

இது குறித்து எல்லை பாதுகாப்பு படை ஐஜி சோனாலி மிஸ்ரா கூறியதாவது :-

இந்தியா ஒரு அமைதியான சூழ்நிலையில் இருப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால் தான் அவர்கள் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். நேற்றும் இதுபோல் ஒரு போர்நிறுத்த ஒப்பந்த அத்துமீறலை மேற்கொண்டனர். பிஎஸ்எஃப் மற்றும் இராணுவ தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஒரு பொருத்தமான பதில் அளித்துள்ளது. நம்பகமான தகவல்களின் அடிப்படையில், அவர்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்