இஸ்லமாபாத்,
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறி தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய செயலுக்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய ராணுவம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் தங்கள் நாட்டைச்சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்ததாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இறந்த வீரர்கள் என இருவரது புகைப்படத்தையும் பாகிஸ்தான் ராணுவம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.