தேசிய செய்திகள்

குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் - எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்

குஜராத்தில் கேட்பாரற்று கிடந்த பாகிஸ்தான் மீன்பிடி படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.


ஆமதாபாத்,

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள சர் கிரீக் பகுதியில் 2 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கேட்பாரற்று கிடந்தன. அந்த பகுதியில் நேற்று காலை 8.25 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் அவற்றை கைப்பற்றினர். இந்த படகுகளில் மீன் பிடிப்பதற்கான சாதனங்கள் இருந்தன. ஆனால் ஆட்கள் யாரும் இல்லை.

இதையடுத்து, எல்லைப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் எந்தவொரு பொருளும் சிக்கவில்லை.

கடந்த 2 மாதங்களாக இப்படி கேட்பாரற்ற நிலையில் பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் விடப்பட்டு புகார்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்