தேசிய செய்திகள்

சர்வதேச எல்லையில் எச்சரிக்கையை மீறி இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டு கொலை

சர்வதேச எல்லையை கடந்து எச்சரிக்கையை மீறி இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானியர் சுட்டு கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

கத்துவா,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் போபியா பகுதியில் ஹீராநகர் பிரிவில் சர்வதேச எல்லை பகுதியை ஒட்டி எல்லை பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 6.45 மணியளவில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்தியாவிற்குள் ஊடுருவ முற்பட்டுள்ளார். ஆனால் அவரை எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர். அதனையும் மீறி அவர் தொடர்ந்து முன்னேறியுள்ளார்.

இதனால் படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்நபர் உயிரிழந்து விட்டார். அவரது உடல் பூஜ்ய கோட்டு பகுதியில் பாகிஸ்தானிய எல்லை அருகே கிடக்கின்றது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்