தேசிய செய்திகள்

கட்சி தொண்டர்களிடம் கள்ள ஓட்டு போடக்கூறிய பா.ஜனதா பெண் வேட்பாளர் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா பெண் வேட்பாளர் கட்சி தொண்டர்களிடம் கள்ள ஓட்டு போடக்கூறிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படான்,

உத்தரபிரதேசத்தின் படான் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுபவர் சங்மித்ரா மவுரியா. மாநில மந்திரி சுவாமி பிரசாத் மவுரியாவின் மகளான இவர், சமீபத்தில் கட்சியின் பிரசார கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேர்தலில் ஒரு ஓட்டும் வீணாகக்கூடாது. யாராவது ஓட்டுப்போடவில்லை என்றால், அது கள்ள ஓட்டாக போடப்படுவது இயல்பு. எனவே உண்மையான வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட நீங்கள் முயற்சிக்க வேண்டும். அப்படியும் அவர்கள் வராமல் போனால், அவர்களது ஓட்டை நீங்கள் போடலாம். அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால், அதை நீங்கள் வீணாக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

இது குறித்த வீடியோ பதிவுகள் உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்த அரசியல் கட்சியினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக சங்மித்ரா மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்