படம்: PTI 
தேசிய செய்திகள்

பெகாசஸ் விவகாரம் : 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் கூட்டறிக்கை

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இரு அவைகளிலும் விவாதிக்க 14 எதிர்க் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இன்றும் 12 வது நாளாக இரு அவைகளும் முடங்கின

இந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாகவும் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்றும் உள்துறை மந்திரி பதிலளிக்க வேண்டுமென்றும் 14 எதிர்க் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. மல்லிகார்ஜுன் கார்கே-எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை

2. சரத் பவார்- தேசியவாத காங்கிரஸ்

3. டி.ஆர்.பாலு- தி.மு.க.

4. ஆனந்த் சர்மா - காங்கிரஸ்

5. ராம்கோபால் யாதவ், சமாஜ்வாதி கட்சி

6. டெரெக் ஓ பிரையன்-திரிணாமுல்காங்கிரஸ்

7. சஞ்சய் ராவத்- சிவ சேனா

8. கல்யாண் பானர்ஜி- திரிணாமுல்காங்கிரஸ்

9. விநாயக் ராவுத்- சிவ சேனா

10. திருச்சி சிவா- தி.மு.க.

11. மனோஜ் ஜா-ராஷ்டீரிய ஜனதா தளம்

12. எலமரம் கரீம், சிபிஐ (எம்)

13. சுஷில் குப்தா-ஆம் ஆத்மி கட்சி

14. முகமது பஷீர்-இந்தியன் முஸ்லீம் லீக்

15. ஹஸ்னைன் மசூதி

16. பினாய் விஸ்வம், சிபிஐ

17. என்.கே.பிரேமச்சந்திரன்

18. எம்வி ஷ்ரேயாம்ஸ் குமார்- லோக் ஜனதா தளம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்