Image Courtesy: ANI  
தேசிய செய்திகள்

"பகவத் கீதையை அவமதிப்பவர்கள் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது"- தெலுங்கானா பா.ஜ.க தலைவர் எச்சரிக்கை

இறுதிசடங்கின் போது யாராவது பகவத் கீதையை வாசித்தால் தாக்கப்படுவார்கள் என பாஜக மாநில தலைவர் பேசியுள்ளார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

பகவத் கீதையை அவமதிப்பவர்கள் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது என தெலுங்கானா பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பண்டி சஞ்சய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் பேசியதாவது:

அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் சித்தரிப்பது தொடர் கதையாகிவிட்டது. ராமாயணமும், மகாபாரதமும் நகைச்சுவையாகக் காட்டப்படும் நிலை வந்துவிட்டது. ராமாயணம், மகாபாரதத்தை அவமதிக்கும் வகையில் ஏதாவது செய்தால் திருப்பி அடிப்போம் என்று கூறினேன். அதனால் அவற்றை அவமதிக்கும் செயல் நின்றுவிட்டது.

இப்போதெல்லாம் யாராவது இறந்தால் பகவத் கீதை இசைக்கிறார்கள். ஆனால் நான் பள்ளியில் படிக்கும் போது, காலையில் சிவாலயத்தில் அது வாசிக்கப்படும். இப்போது அது இசைக்கப்பட்டால் யாராவது இறந்துவிட்டார்களோ என்ற பதற்றம் தொடங்குகிறது.

இனி இறுதிசடங்கின் போது யாராவது பகவத் கீதையை வாசித்தால் தாக்கப்படுவார்கள் அவர்கள் தப்பமாட்டார்கள். இது இந்து தர்மம் மீதான திட்டமிட்ட தாக்குதல். அவர்கள் அதை ஒரு நாகரீகமாக மாற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது