தேசிய செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, வினீத் ஜிண்டால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சென்னை தேனாம்பேட்டையில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்' என்று கூறியதாக தெரிகிறது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகரும், சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான வினீத் ஜிண்டால், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் வெறுப்பு பேச்சு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதியாத சென்னை போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக வினித் ஜிண்டால் டெல்லி போலீசில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்திருந்தார். இந்து மக்களின் மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தி இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது