தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு. அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான விவகாரத்தில் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் டிசம்பர் 15-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழக அரசின் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பிலும் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்