தேசிய செய்திகள்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ராஜஸ்தானில் பெட்ரோல் டீலர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதன்படி ராஜஸ்தானில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினரின் வேலைநிறுத்தப் போராட்டம், அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு