தேசிய செய்திகள்

செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஜிசாட்- 6ஏ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். #PMmodi #ISRO

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு வசதிக்காகவும், பருவநிலை மாற்றத்தை அறிவதற்காகவும் ஜிசாட்- 6ஏ என்னும் புதிய செயற்கைகோளை வடிவமைத்து இருக்கிறது. இதை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை 4.56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்8 ராக்கெட்டில் முதல் நிலையில் திடஎரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றிவர இருக்கிறது.

செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த வாழ்த்துச்செய்தியை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- ஜிஎஸ்.எல்.வி-எப்08 கிரயஜோனிக் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கும், பணியாற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜிசாட்-6ஏ தொலைத்தொடர்பு செயற்கை கோள், செல்போன் பயன்பாடுகளுக்கு புதிய சாத்தியங்களை வழங்கும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்