புதுடெல்லி
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் நாளை சிறந்த நிர்வாக தினமாக நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.
இந்த விழாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் வாஜ்பாய் உருவமும், அதற்கு கீழ் அவரது பெயர் தேவநகரி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் அவரது தோற்றம், மறைவு ஆண்டுகள் இடம் பெற்றிருக்கும் என்றும், மறு புறத்தில் சிங்க சின்னமும், அதற்கு கீழ் 100 ரூபாய் குறியீடும், சத்தியமேவ ஜெயதே என்ற தேவநாகரி எழுத்துகளும் இடம் பெற்றிருக்கும்.
இந்த நாணயம் வெள்ளி, செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.