கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை புறக்கணித்த தெலுங்கானா முதல்-மந்திரிக்கு பா.ஜ.க. கண்டனம்

பிரதமர் மோடியை புறக்கணித்த தெலுங்கானா முதல்-மந்திரிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று ஐதராபாத் வந்தபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்க முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வரவில்லை. தொடர்ந்து 5-வது முறையாக அவர் பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்ச்சியைத் தவிர்த்து விட்டார். இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதையொட்டி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் தருண் சுக் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜனநாயக நடைமுறைகளுக்கான மரியாதையை இழப்பதோடு மட்டுமில்லாமல், தெலுங்கானாவுக்கு சந்திரசேகரராவ் அவமானமாக மாறி உள்ளார். மாநிலத்தில் பிரதமர் ரூ.11 ஆயிரத்து 300 கோடி வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். இது சந்திரசேகரராவுக்கும், தெலுங்கானா மக்களுக்கும் பெருமிதத்துக்குரிய தருணமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவர் மாநில மக்களை அவமதித்துள்ளார். இது அவர் வெளியேற்றப்பாதைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்