தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன், பிரதமர் மோடி திடீர் சந்திப்பு..!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் பாதுகாப்புக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், விவாதங்களும், எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளன.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவலையளிப்பதாக தெரிவித்திருந்தார். பிரதமரை நேரில் வருமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்தில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்பது பற்றி நேரில் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு