Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

டெல்லியில் முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை..!!

டெல்லியில் இன்று நடைபெறும் முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடிஉரையாற்றுகிறார்.

புதுடெல்லி,

முதல்-மந்திரிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். கடைசியாக, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி இம்மாநாடு நடந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் மாநில முதல்-மந்திரிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன இந்த மாநாடு 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இன்று டெல்லியில் நடக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்ட மந்திரி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் மோடி இந்த மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியேரும் இக்கூட்டத்தில் உரை ஆற்ற உள்ளனர். யேகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பெம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ் உள்ளிட்ட முதல்-மந்திரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்கின்றனர்.

முன்னதாக அனைத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் பின் நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல், சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.

முதல்-மந்திரிகளும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளும் பல்வேறு அமர்வுகளாக விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு