தேசிய செய்திகள்

அசாம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை சுற்றுப்பயணம்

அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் தேகியாஜுலி பகுதியில் 2 மருத்துவமனைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட சாலைகளுக்கான அசோம் மாலா என்ற திட்டம் ஆகியவற்றுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாளை காலை 11.45 மணியளவில் நாட்டுகிறார்.

இதன்பின்னர் மேற்கு வங்காளத்தின் ஹல்டியா நகருக்கு அவர் செல்கிறார். கியாஸ் சிலிண்டர் இறக்குமதிக்கான முனையம் ஒன்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தோபி-துர்காபூர் பகுதியில் பிரதம மந்திரி உர்ஜா கங்கா திட்டத்தில் இயற்கை வாயு பைப்லைன் பிரிவையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது