தேசிய செய்திகள்

கேதர்நாத் மலை பகுதியில் போலீசாரின் தேடுதல் பணியில் 4 எலும்பு கூடுகள் கண்டெடுப்பு

உத்தரகாண்டில் கேதர்நாத் மலை பகுதி செல்லும் வழியில் போலீசார் 4 எலும்பு கூடுகளை கண்டெடுத்துள்ளனர்.

தினத்தந்தி

ருத்ரபிரயாக்,

உத்தரகாண்டின் கேதர்நாத்தில் கடந்த 2013ம் ஆண்டு கனமழை பொழிந்து பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் காணாமல் போனார்கள். இந்நிலையில், அவர்களை தேடும் பணியில் மாநில போலீசார் மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

கேதர்நாத் பேரிடரில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிக்காக ருத்ரபிரயாக் பகுதியில் மீட்பு குழுவினர் சென்றனர். இதில், கடந்த 16ந்தேதி முதல் இதுவரை 4 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவை 4 ஆண்களுக்கு உரியவை என்று தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவற்றின் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது என ருத்ரபிரயாக் எஸ்.பி. கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது