டெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் லகிம்பூரில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். வன்முறை நடைபெற்ற பகுதிக்கு செல்ல காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஒருபக்கம் அரசு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது மற்றும் மறுபக்கம் லகிம்பூர் கேரி செல்லும் அரசியல் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பிரதமர் அவர்களே இதற்கான காரணம் என்ன?. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும் மற்றும் மத்திய மந்திரி அவரது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று நாடு விரும்புகிறது என்றார்.