புதுடெல்லி,
இந்திய குடியரசு தலைவரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 2 நாட்களுக்கு பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அவர் பஞ்சாப்பின் சண்காரில் அமைந்துள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் இன்று கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து அரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சூய் கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.