தேசிய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு குடியரசுத் தலைவர் மாற்றம் - ஜனாதிபதி மாளிகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துமவனைக்கு கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 30 ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ள ராம்நாத் கோவிந்தின் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு ஜனாதிபதி மாற்றப்பட்டார்.

அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இந்த தகவல்களை ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு