தேசிய செய்திகள்

கடந்த ஆண்டை விட வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு விலை குறைவு - மத்திய அரசு தகவல்

வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலை கடந்தாண்டை விட குறைவு தான் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இதுகுறித்து மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில்,

வெங்காயம், தக்காளி, மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு குறைவாகவே விற்கப்படுகிறது.

டெல்லியில் வெங்காயம் விலை கடந்த 14ம் தேதி அன்று கிலோ ரூ.44 ஆக இருந்தது. மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் முறையே ரூ.45, 57, 41 என இருந்தது. அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சில்லரை விற்பனை விலை ரூ.37.06. அகில இந்திய அளவில் அதன் மொத்த விலை குவிண்டால் ரூ.3002.25.

கடந்த அக்டோபர் 12ம் தேதி வரை, நாட்டின் முக்கிய சந்தைகளில் 67,357 மெட்ரிக் டன் வெங்காயங்கள் வழங்கப்பட்டன. இது தவிர நுகர்வோர் விவகாரத்துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்துச் செல்ல கிலோ ரூ.21க்கு வெங்காயங்களை வழங்கியது.

விலை நிலைப்படுத்துதல் நிதியின் கீழ், வெங்காய கிடங்கை நுகர்வோர் விவகாரத்துறை பராமரிக்கிறது. 2021-22ம் ஆண்டில் 2 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 2.08 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல் உருளைக்கிழங்கின் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் தற்போது உருளைக்கிழங்கு விலை கடந்த 14ம் தேதி கிலோ ரூ.27 ஆக இருந்தது. கடந்தாண்டு இதே தேதியில் இது கிலோ ரூ.40 ஆக இருந்தது. வெங்காயம் விலை தற்போது ரூ.42 ஆக உள்ளது. கடந்தாண்டில் இது ரூ.50 ஆக இருந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு