புதுடெல்லி,
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார்.
கடந்த மாதம் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற சுவையான அம்சங்கள் தொகுக்கப்பட்ட ஒரு கையேட்டை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். கடந்த மாத நிகழ்ச்சியில் இடம் பெற்றவர்களின் பேட்டியும் அதில் உள்ளது.
இந்த கையேட்டை படிப்பதற்கான லிங்க் வசதியை தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ளார். இம்மாத நிகழ்ச்சி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.