தேசிய செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி

மக்களவை தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அதிக தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் முன்னிலையில் உள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள். தெற்காசியாவின் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் ஆகியவற்றுக்காக அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன்என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உங்களது நல்வாழ்த்துகளுக்கு நன்றி; நமது தேசத்தில் அமைதி, மேம்பாட்டுக்கு எப்போதும் நான் முன்னுரிமை அளித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்