தேசிய செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி- இம்ரான்கான் சந்திப்பு இல்லை: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி- இம்ரான்கான் சந்திப்பு இல்லை என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டுக்கு இடையே இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இதுபற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமாரிடம் கேட்டபோது, எனக்கு தெரிந்தவரை நமது பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றார்.

இதற்கிடையே இந்த மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் சீ இன் வுகன் ஆகியோர் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச இருப்பதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு