லக்னோ,
உத்தரப்பிரதேச தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிஜ்னோருக்கு சென்று பிரச்சாரம் செய்ய இருந்தார்.
இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் உத்தர பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி, காணொலியின் வாயிலாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.