புதுடெல்லி,
இதுகுறித்து பிரதமர் அலுவகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக ஜனவரி 2, நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் கணேஷி லால் மற்றும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், தொழில்துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஐஐஎம் சம்பல்பூரின் ஆசிரியர்கள் உட்பட 5000-க்கும் அதிகமானோர் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.