புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார்.
அதன்படி, 69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாற்ற உள்ளார். இன்று காலை 11 மணி அளவில் ஒலிபரப்பாக உள்ள இந்த நிகழ்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சீனா உடனான எல்லைப் பிரச்னை மற்றும் புதிய வேளாண் மசோதாக்கள் போன்ற முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.