தேசிய செய்திகள்

பிரதமர் நிவாரண நிதி; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 33 பேர் தலா ரூ.50 ஆயிரம் வழங்கினர்

பிரதமர் நிவாரண நிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 33 பேர் தலா ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளனர்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே உள்பட அனைத்து நீதிபதிகளும் கொரோனா தடுப்புக்கான பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளனர்.

இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்திய தலைமை நீதிபதி உள்பட அனைத்து 33 நீதிபதிகளும் கொரோனாவை எதிர்கொள்வதற்கான தேசத்தின் போராட்டத்தில் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இதற்கான காசோலை முன்பே வழங்கப்பட்டு விட்டது. இதேபோன்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி என்.வி. ரமணா, பிரதமர் நிவாரண நிதி மற்றும் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா முதல் மந்திரிகளின் நிவாரண நிதிகளுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை முன்பே வழங்கி விட்டார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு