புதுடெல்லி,
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்கின்றன. சிலிண்டரை நிரப்ப பணம் இல்லை. கொரோனா பொதுமுடக்கத்தால் தொழில்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. நாட்டு பெண்களின் துன்பம் மற்றும் அவர்களின் வலியைப் பற்றி எப்போது பேசுவோம்? நாட்டில் பணவீக்கத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி, 'பணவீக்கம்' தொடர்பாக மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.