தேசிய செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு; கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலிடம், சி.ஐ.டி. போலீசார் விசாரணை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை நேற்று சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலை நேற்று சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் 10 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அம்ருத் பாலிடம், முறைகேடு பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்பு அறை சாவியை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமாரிடம் கொடுத்தது ஏன்? இந்த முறைகேட்டில் உங்களது பங்கு என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தேர்வு முறைகேடு குறித்து சிறையில் இருக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தகுமார், ஏட்டு ஸ்ரீதர், சீனிவாஸ், ஹர்ஷா ஆகியோரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு 4 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு