தேசிய செய்திகள்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்

தொடர்ந்து 6வது நாளாக நடந்து வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. #KiranBedi #Narayanasamy

புதுச்சேரி,

பிப்ரவரி 13-ந் தேதி முதல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வந்தார்.

தொடர்ந்து 6வது நாளாக தர்ணா போராட்டம் நடத்திய நாராயணசாமி, கிரண்பேடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு விடுத்தார். ஆனால் நாராயணசாமியின் கோரிக்கைகளை ஏற்க கிரண்பேடி மறுத்து விட்டார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும் படி நாராயணசாமிக்கு, கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்தார். ஆளுநர் மாளிகையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைகளின் செயலாளர்களுக்கும் கிரண்பேடி அழைப்பு விடுத்தார்.

கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு செல்ல உள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி-முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. தர்ணா போராட்டத்தை முடித்துக்கொள்வது தொடர்பாக புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், 39 கோரிக்கைகள் தொடர்பாக ஆளுநர் பரிசிலனை செய்ய உறுதியளித்துள்ளதாகவும், அதிகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை பொருத்திருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தொடர்ந்து 6வது நாளாக நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாகவும், போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு