தேசிய செய்திகள்

புனேவில் பழைய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக பறிமுதல், காங். கவுன்சிலர் உட்பட 5 பேர் கைது

புனேவில் ரூ. 3 கோடி மதிப்பு மிக்க பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் பணமதிப்பிழப்புக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட நோட்டுக்கள் ரூ.3 கோடி மதிப்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்ததாக காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சடரா மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக புனே வந்ததாகவும், இது பற்றிய கிடைத்த இரகசிய தகவலின் பேரில் அனைவரும் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். 1000,500 ரூபாய் நோட்டுக்கள் என மொத்தம் 48 ஆயிரம் தாள்கள் இருந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பான வருமான வரித்துறையிடம் தகவல் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு