தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு புதிய ரஷ்ய தூதரை நியமித்தார் புடின்

இந்தியாவிற்கான புதிய ரஷ்ய தூதரை நியமித்தார் அதிபர் புடின்.

புதுடெல்லி

நிக்கோலாய் குடாஷேவ் எனும் தொழில்முறை ராஜதந்திரி இந்தியாவிற்கான புதிய தூதராக இருப்பார் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு ஆசியா விவகாரங்களில் நிபுணரான குடாஷேவ் தற்போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் செயலகத்தில் துணை பொது இயக்குநராக பதவி வகித்து வருகிறார். குடாஷேவ் மைக்ரோனேஷியா மற்றும் மார்ஷல் தீவுகளுக்கான தூதராக 2014-2015 ஆம் ஆண்டுகளில் பதவி வகித்து வந்தார்.

கடந்த முறை பதவி வகித்து வந்த தூதர் கடாகின் இறந்து ஏழு மாதங்கள் கழித்து புதிய தூதர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தி மொழியை சரளமாக பேசும் கடாகின் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் மரணமடைந்தார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்