தேசிய செய்திகள்

அதிக வளர்ச்சி அடையும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தொழில் மையங்கள் உருவாக்கப்படும் - ராகுல்காந்தி

அதிக வளர்ச்சி அடையும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தொழில் மையங்கள் உருவாக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

கவுகாத்தி:

அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள போகாகாட் நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஐக்கிய முன்னேற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தால் புதிய கணக்கெடுப்பின்படி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். இந்த மசோதாவை எந்த வகையிலும் நிறைவேற விட மாட்டோம்.

பிரதமர் மோடி நிறைவேற்றத் தவறிய தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை கூலி நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் எங்கள் ஆட்சியில் அமல்படுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்ந்து வழங்கப்படும்.

உற்பத்தியில் அதிக வளர்ச்சி அடையும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய தொழில் மையங்கள் உருவாக்கப்படும்.

முன்னர் எப்போதும் இல்லாத அளவில் இந்த நாட்டில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. எங்கள் ஆட்சியில் இளைஞர்கள் சுயதொழில்கள் தொடங்குவதற்கு கடனுதவி அளிக்கப்படும் என்று கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்